கருப்பு உளுந்து நம் உடலுக்கு எலும்புக்கும் பலம் சேர்க்க கூடியது. அதனை வைத்து சுவையான புட்டு எப்படி செய்வது என்று ஃபூடிஸ்ரூஃப் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து பச்சரிசி ஏலக்காய் உப்பு தேங்காய் நாட்டுச்சர்க்கரை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் கருப்பு உளுந்து எடுத்து வறுக்கவும். பின்னர் அதனுடன் பச்சரிசி சேர்த்து வறுத்து ஆறவைத்து ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். உப்பு சிறிது சேர்த்து மாவை கலந்து விடவும்.
அடுத்ததாக இட்லி பாத்திரம், புட்டு குடம் அல்லது தேங்காய் ஓட்டில் இந்த மாவு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வரவும். பின்னர் இதனை ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து புட்டு ரெடியாகிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.