தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - அரை கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு
நெய்
கடுகு, உளுந்து, கடலை பருப்பு
முந்திரி
இடித்த பூண்டு
வேர்க்கடலை
கருப்பு உளுந்து சாதம் குழந்தைகளுக்கு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
செய்முறை
ஒரு கடாயில் கருப்பு உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து மீடியம் ஃப்ளேமில் நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் நெய், அரை டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு இடித்து சேர்த்துக் கொள்ளவும். வேர்க்கடலை, முந்திரி, கருவேப்பிலை சேர்த்து வறுத்து இதில் வடிச்ச சாதம் உப்பு, அரைத்த பொடி சேர்த்து கிளறி எடுத்தால் அருமையான உளுந்து சாரம் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“