வளரும் பெண் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லதாம்... உளுந்து பால் ஒருமுறை இப்படி செஞ்சு குடுங்க!

வளரும் பெண் குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது இந்த கருப்பு உளுந்து பால் செய்துகொடுங்கள் ரொம்ப நல்லது. இந்த கருப்பு உளுந்து பால் எப்படி செய்வது, என்று இங்கே பார்க்கலாம்.

வளரும் பெண் குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது இந்த கருப்பு உளுந்து பால் செய்துகொடுங்கள் ரொம்ப நல்லது. இந்த கருப்பு உளுந்து பால் எப்படி செய்வது, என்று இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
black urad

கருப்பு உளுந்து பால் செய்வது எப்படி என்று மாயஸ் கிச்சன் (@mayaskitchenn) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர்.

வளரும் பெண் குழந்தைகளுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது இந்த கருப்பு உளுந்து பால் செய்துகொடுங்கள் ரொம்ப நல்லது. இந்த கருப்பு உளுந்து பால் எப்படி செய்வது, என்று இங்கே பார்க்கலாம். 

Advertisment


கருப்பு உளுந்து பால் செய்வது எப்படி என்று மாயஸ் கிச்சன் (@mayaskitchenn) என்ற யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளனர். இந்த கருப்பு உளுந்து பால் வளரும் பெண் குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது என்று கூறுகிறார்கள்.

கருப்பு உளுந்து பால் செய்முறை:

கருப்பு உளுந்து அதாவது தோல் நீக்கப்படாத உளுந்து கால் கப் அளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அதை குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, ஸ்டவ்வை மிதமான தீயில் வைத்து, 3-4 விசில் வரட்டும் என்று நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உளுந்து நன்றாக வெந்து ஆறிய பிறகு, அதை எடுத்து ஒர் மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் உளுந்து வேக வைத்த தண்ணீர், இதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் கொஞ்சமாக ஏலக்காய்த் தூள், கொஞ்சம் சுக்கு தூள் சேர்த்து நன்றாகக் கலக்கி விடுங்கள்.

Advertisment
Advertisements

 

இப்போது இதை எடுத்து ஸ்டவ்வில் வைத்து கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் கருப்பட்டியைக் கரைத்து வடிகட்டி ஊற்றுங்கள்.  நன்றாகக் கலக்கி விடுங்கள். மிதமான தீயில் 3 நிமிடம் கொதித்த பிறகு, 1 கப் அளவு தேங்காய் பால் சேருங்கள். ஒரு கொதி வந்ததும் கேஸ் ஆஃப் பண்ணிவிடுங்கள். அவ்வளவுதான் சத்தான ஆரோக்கியமான உளுந்து பால் தயார். அவ்வள்வுதான், இதை அப்படியே குடிக்கலாம்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: