Advertisment

கட்டு மஸ்தான் உடம்புக்கு இந்த ஃபுட்ஸ் ரொம்ப முக்கியம்... பாடி பில்டர்ஸ் மிஸ் பண்ணாதீங்க!

கட்டு மஸ்தான உடம்புக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பார்ப்போம். மிஸ் பண்ணாம இந்த உணவுகளை சாப்பிட்டு வர கட்டு கட்டான உடல் வடிவமைப்பு பெறலாம்.

author-image
WebDesk
New Update
gym 3 - unsplash (1)

கட்டுக்கோப்பான உடலுக்கு தேவையான உணவுகள்

பாடி பில்டராக சாப்பிட வேண்டிய உணவுகள் என சில உணவுகள் உள்ளது. உடலை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள அனைவருமே விரும்புவார்கள் அதிலும் ஜிம்மிற்கு சென்று ஒர்க் அவுட் செய்பவர்கள் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும், தசைகள் எல்லாம் நன்கு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம். உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னாடியும் பின்னாடியும் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். 

Advertisment

ஓட்ஸ்: தினமும் காலையில் ஒரு பவுல் ஓட்ஸ் சாப்பிடும் போது கொழுப்புகளின் சேர்க்கை உடலில் குறையும் ஆற்றல் மேம்படும். 

முட்டை: முட்டையில் விட்டமின் ஏ விட்டமின் டி அதிக அளவில் உள்ளதால் தினசரி இரண்டு முட்டை சாப்பிட வேண்டும். 

பச்சை காய்கறிகள்: ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடலாம். பச்சை காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம் இது உடலுக்கு சத்தானது. 

Advertisment
Advertisement

வேர்க்கடலை பீனட் ஜாம்: இதனை பிரட் உடன் சேர்த்து சாப்பிடும்போது நீண்ட நேரம் பசி எடுக்காது. எனவே உடம்பில் கொழுப்பு சத்தும் அதிகம் சேர வாய்ப்பு இல்லை எனவே இதனை தாராளமாக சாப்பிடலாம். 

நண்டு: தசைகள் வலுவடையும். 

கடல் சிற்பி: தசையின் வலிமைகளை அதிகரிக்க உதவும். தசைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது.

வாழைப்பழம்: வாழைப்பழத்தை ஜிம் செல்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். 

பசலைக்கீரை: பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் தசையை வளர்ப்பதற்கு உதவும். 

சிவப்பு மிளகாய்: எலும்புகளின் ஆரோக்கியத்தையும் ரத்த ஓட்டத்தையும் சீராக வைக்க உதவும். 

ப்ளூ பெர்ரி: உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலை கட்டமைப்பாக வைக்கவும் உதவும். 

கிரீன் டீ: உடல் வளர்ச்சியை அதிகரித்து நோய் தாக்காமல் பாதுகாக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 

சர்க்கரைவள்ளி கிழங்கு: இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் இதை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

தக்காளி: வைட்டமின் ஏ அதிக அளவு உள்ளது. தக்காளியை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டுடன் இது கலந்து சாப்பிடணும். உடற்பயிற்சி செய்பவர்கள் தனியாக இதை சாப்பிடலாம். 

பாடி பில்டர் ஆக சாப்பிட வேண்டிய 25 உணவுகள் | Bodybuilding foods in tamil|Gym foods|Healthy lifestyle

அத்திப்பழம்: உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்கள் தினமும் அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும். 

காளான்: வெள்ளை நிற பட்டன் காளான் சாப்பிடலாம். தசை வளர்ச்சிக்கு உதவக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது தசையை வலிமையாக வைக்கவும் உதவும். 

திணை: திணையில் அமினோ ஆசிடுதகள் அதிகம் உள்ளதால் தசைகளுக்கு வலிமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்க உதவும். 

ஆட்டுக்கறி: ஆட்டுக்கறியில் புரதச்சத்து அதிகம் உள்ளது தசை வளர்ச்சியையும், தசையின் உறுதி தன்மையையும் அதிகரிக்க உதவும் அதுமட்டுமின்றி தொப்பை குறைய உதவும். 

பருப்பு வகைகள்: பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்து கிடைக்கும். நிறைய புரதச்சத்தை இருப்பதால் உடல் கட்டுக்கோப்பாகவும் ஜிம் சென்று சிக்ஸ் பேக் வைக்க நினைப்பவர்களுக்கு உதவும். 

 இதை தவிர அண்ணாச்சி பழம் தசையின் வளர்ச்சிக்கு உதவும்,  ஆலிவ் ஆயில் சேர்த்து சமைத்தால் தசை வளர்ச்சிக்கு உதவும். டார்க் சாக்லேட் இதை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர உடலில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். ஆளி விதையில் நார்ச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளதால் பாடி பில்டராக நினைப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இதே போல பாதாம் பீட்ரூட் போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

gym Essential foods for better muscle growth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment