தினமும் காலையில் எழும்போது புத்துணர்ச்சியோடு எழ வேண்டும். நால் சிலருக்கு காலையில் எழும்போது சோர்வாக இருக்கும். அப்படி உணர்பவர்கள் தசை வலி, கொட்டாவி, சோர்வு, பாத வலி என்றெல்லாம் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களுக்களுக்கான ஒரு சரியான தீர்வை மருத்துவர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
காலையில் எழுந்ததும் உடல் சோர்வு யாருக்கெல்லாம் இருக்கும் என்று பார்க்கலாம்.
நீண்ட நாள் நோய்கள் - ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள். குறிப்பாக தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்கு நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு சோர்வு இருக்கும்.
இரத்தசோகை - உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு எப்போதும் சோர்வாக இருக்கும். அதிகம் தூங்குவார்கள். எழ சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.
நீரிழிவு - நீரிழிவு நோய் உள்ளவர்கள், கிட்னி கோளாறு உள்ளவர்களுக்கு எல்லாம் அடிக்கடி இரவில் சிறுநீரகம் கழிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களுக்கு உடல் சோர்வு அதிகமாக இருக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் சோர்வு இருக்கும்.
குறட்டை பழக்கம் உடையவர்களுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது. அப்படி இருப்பவர்களுக்கும் உடல் சோர்வாக இருக்கும். முடக்குவாதம் பிரச்சனை உள்ளவர்களுக்கு கால் வலி, எழ முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனை இருக்கும்.
இதுமாதிரி பிரச்சனை உள்ளவர்கள் டீக்கு இந்த கசாயத்தை தயார் செய்து குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். இந்த மாதிரி பிரச்சனை உள்ளவர்களுக்கு சோர்வு வரும் நிலையில் அதை போக்க கூடிய ஒரு கசாயம் அல்லது டீ பற்றி பார்ப்போம்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்
கிராம்பு அன்னாசி பூ சோம்பு நெய்
கிராம்பு, அன்னாசி பூ, சோம்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். பின்னர் தினமும் காலையில் இதை நெய்யுடன் சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம்.
அதேபோல உடல் சோர்வு நீங்க வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். எண்ணெயில் சீரகம் போட்டு கொதிக்க காய்ச்சி அதை தலையில் இருந்து தேய்த்து ஒரு மசாஜ் கொடுத்து குளிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.