இந்த ஆண்டு பொங்கலை மேலும் சிறப்பாக்க ஒரு ஸ்பெஷல் ரெஸிபி. போகி ஸ்பெஷல் போளி, மரவள்ளிக் கிழங்கு வடைஎப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
வெல்லம் பொடி
ரவா
நெய்
வறுத்த பாசிப்பருப்பு பொடி
ஏலக்காய் பொடி
எண்ணெய்
உப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ரவை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இறுக்கமாக மாவை பிசையவும். 2 நிமிடங்கள் பிசைந்து, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, ரொட்டி மாவு பதம் வரும் வரை நன்கு பிசையவும். மூடி வைத்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
அதற்கு பூரணம் செய்ய சர்க்கரைவள்ளி கிழங்கை தோலுரித்து வேகவைக்கவும். எடுத்து மசித்து அதில் ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
1 கப் வெல்லப் பொடியை சேர்த்து அனைத்தையும் பிசைந்து, லட்டு மாதிடி எடுத்து (கலவை சற்று தளர்வாக இருந்தால், 1 டீஸ்பூன் வறுத்த பாசிப்பருப்புப் பொடியைச் சேர்த்து, சரியான நிலைத்தன்மையைப் பெற கலக்கவும்) மாவினுல் வைத்து தேய்த்து எண்ணெயில் போட்டு எடுக்கலாம் அல்லது தோசைக்கல்லில் சுட்டு எடுக்கலாம்.
மரவள்ளிக்கிழங்கு வடை - தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு
சன்னா பருப்பு
உளுத்தம் பருப்பு
சீரகம்
சிவப்பு மிளகாய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
சன்னா பருப்பு கழுவி ஊற வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.மரவள்ளிக்கிழங்கு துருவலை மிக்ஸியில் மைய அரைக்கவும்.
ஊறவைத்த சன்னா பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் துருவிய மரவள்ளிக்கிழங்கு சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் அனைத்து பொருட்களையும் அரைக்கவும்.
Bogi Special Poli without Maida &Tapioca Vada போகி ஸ்பெஷல் மைதா இல்லாமல் போலி & மரவள்ளி கிழங்கு வடை
இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடை தட்டி போட்டு எடுத்தால் மரவள்ளிக்கிழங்கு வடை தயார். சூடான மரவள்ளிக்கிழங்கு வடையை சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து சாப்பிடலாம்.