முட்டை சாப்பிடுவது உடலின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். முட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை உட்கொள்ளும்போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இரும்பு, புரதம், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, ஃபோலேட் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் அதிகம் காணப்படுகின்றன.முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் இருப்பதால், அவற்றை காலை உணவாக உட்கொள்ள வேண்டும். இது உடல் வலு மற்றும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.
காலையில் வெறும் வயிற்றில் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
முட்டையில் உள்ள புரதம், செலினியம், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்றவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் காலையில் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை மருத்துவர் பட்டியலிட்டுள்ளார்.
முட்டைகளை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல நன்மைகள் கிடைக்கும். இதில் அதிக இரும்புச்சத்து உள்ளது.
பல்வேறு புரதச்சத்துக்கள் முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகம் உள்ளது. கொலைன் சத்து முட்டையில் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
கோழி முட்டையின் நன்மைகள் Dr. Sivaraman speech in Tamil | Chicken Egg | Health | Tamil speech box
முட்டையை வேகவைத்து வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் சாப்பிடலாம். வேக வைக்காமல் அதிகம் சாப்பிட கூடாது. நாட்டுக்கோழி முட்டை தான் உடலுக்கு சிறந்தது. பிராய்லர் முட்டைகளை தவிர்ப்பது நல்லது.
கோழி முட்டைகளை விட காடை முட்டைகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். அதில் கோழி முட்டையை விட அதிக சத்துக்கள் உள்ளது.
முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
1.முட்டை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
2.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
3. மூளை திறனை மேம்படுத்த உதவும்
4. முட்டை சாப்பிடுவதால் கண்களுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன் கண்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
5.காலையில் முட்டை சாப்பிடுவது, நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“