இனி கிலோ கணக்கில் அல்வாவை கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இனி சுலபமாக உங்களுக்கு தேவையான அளவில் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். சுவையாக எதுவும் அரைக்காமல் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1 கப் சோள மாவு
1 ⅓ கப் தண்ணீர்
1 ½ தேக்கரண்டி நெய்
¼ கப் உடைந்த முந்திரி பருப்பு
¼ கப் நறுக்கிய பாதாம்
¼ கப் முலாம்பழம் விதைகள்
2 கப் தண்ணீர் (சுமார் 500 மில்லி)
2 கப் சர்க்கரை
½ தேக்கரண்டி ஏலக்காய் தூள்
1 சிட்டிகை உணவு கலர்
6 தேக்கரண்டி நெய்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். கடாயில் நெய் சூடாக்கி, முந்திரி, பாதாம், முலாம்பழம் விதைகள் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதே கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
சர்க்கரை பாகில் ஏலக்காய் தூள் சேர்க்கவும். சோள மாவு கலவையை சர்க்கரை பாகில் ஊற்றி, ஜெலி போன்ற பதத்திற்கு வரும் வரை கிளறவும். உணவு கலரை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். நெய் சேர்த்து அல்வா கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
வறுத்த பருப்புகளை சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் அல்வாவை பரப்பி 4 மணி நேரம் ஆற விடவும்.
துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.