பட்டணியை வைத்து மிகவும் சுவையான போண்டா செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டணி
அரிசி மாவு
கோதுமை
சோடா உப்பு
உப்பு
பச்சை மிளகாய்
சோம்பு
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
எண்ணெய்
செய்முறை
பச்சை பட்டணியை நன்றாக கழுவ வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றை போட்டு அரைத்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த கலைவையுடன் கோதுமை மாவு , அரிசி மாவு சேர்க்கவும். அரைக்கும்போது போது தேவைபட்டால் தண்ணீர் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து இதில் சோடா உப்பு சேர்த்து கொள்ளவும்.

தொடர்ந்து நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். தற்போது போண்டா பதத்திற்க்கு கொண்டு வரவும். தற்போது, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகும் வரை காத்திரக்கும். தொடர்ந்து போண்டவை எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.