இந்த கோடையில் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வைத்து சாப்பிட கூடிய ஒரு ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம். சுவையான கார பூந்தி கடலை மாவு வைத்து செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 2 கப் அரிசி மாவு - 1/4 கப் உப்பு எண்ணெய் நெய் முந்திரி வேர்கடலை தட்டிய பூண்டு கறிவேப்பிலை மிளகாய் தூள் சீரக தூள்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பெரிய கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் உப்பு எடுத்து நன்றாக கலந்து சூடான எண்ணெய் சேர்த்து மீண்டும் கலந்து சிறிது சிறிதாக் தண்ணீரைச் சேர்த்து, மாவை கட்டிகள் இன்றி கலந்து விடவும்.
ஒரு கடாயில் பூந்தி பொறிக்க எண்ணெயை சூடாக்கவும். ஒரு பூந்தி கரண்டியில் மாவை ஊற்றி, கடாயின் மேலே பிடிக்கவும். மற்றொரு கரண்டியைப் பயன்படுத்தி மாவை மெதுவாக அழுத்தி விடவும், அதனால் மாவு சிறிய உருண்டைகளின் வடிவத்தில் கடாயில் விழும்.
இந்த பூந்தியை பொன்னிறமாக மொறுமொறுன்னு வறுத்து வைக்கவும். எண்ணெய் வடிந்ததும் அதில் நெய்யில் வறுத்த முந்திரி, வேர்க்கடலை, தட்டிய பூண்டு, கருவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு, சீரக தூள் சேர்க்கவும்.
பூந்தியை மசாலாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். காரா பூந்தியை முழுவதுமாக ஆறவிட்டு பின்னர் 2-3 நாட்கள் வரை சிறந்த சேமிப்பிற்காக காற்று புகாத ஜாடிக்கு மாற்றவும்.