ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உடலில் உள்ள எல்லா இடங்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லவும், சத்துக்களை கொண்டு செல்லவும் ரத்த ஓட்டம் முக்கியம்.
இந்நிலையில் நாம் சில உணவுகளை சாப்பிட்டால், நமது ரத்த ஓட்டம் சீராகும். மேலும் இந்த வகை உணவுகளால், உடலில் உள்ள வீக்கம் குறையும். மேலும் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படியாது.
மாதுளைப்பழம்:
இந்த பழத்தில் பாலிபினால் ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் நடைட்ரேட்ஸ் இருக்கிறது. இவை இதய ரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளை விரித்துவிடும் தன்மை கொண்டது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
மாதுளைப்பழங்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால், ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதில் இருக்கும் டைட்டிரிக் ஆசிட் ரத்த குழாய்களை சுருங்கி, விரிவதற்கு உதவுகிறது. குறிப்பாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது, மாதுளைப் பழம் சாப்பிடுவது நன்மை தரும்.
பீட்ரூட்
இதில் நைட்ரேட்ஸ் இருக்கிறது. இதை நைட்ரிக் ஆசிட் ஆக உடல் மாற்றுகிறது. பீட்ரூட்டும் ரத்த குழாய்களை விரிவாக்க உதவுகிறது. இதனால் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்.
பூண்டு மற்றும் வெங்காயம்:
பூண்டில் சல்பர் இருக்கிறது. இவற்றில் அலிசின் இருப்பதால், ரத்த குழாய்கள் சுருங்கி, விரிய உதவுகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். இந்நிலையில் வெங்காயத்தில் பிளாப்பாய்ட்ஸ் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இவை இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்நிலையில் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும்போது, ரத்த கூழாய்கள் மற்றும் நரம்புகளை விரிவாக்கி உதவுகிறது.
பூண்டு மற்றும் வெங்காயம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பூண்டில், ரத்தத்தை கட்டியாக்காமல் மாற்றும் தன்மை இருப்பதால், ரத்தம் கட்டிக்கொள்வது, ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். இதுபோல வெங்காயத்தில் பிளாப்பாய்ட்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் ரத்த பிளேட்லெட்டுகள் ஒருகிணையாமல் பார்த்துக்கொள்ளும்.
பட்டை:
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக இருக்கிறது. ரத்த குழாய்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும். இதுபோல இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ரத்த அழுத்த அளவை குறைக்கிறது. மேலும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil