Advertisment

புது ரெசிபி: சுரைக்காயில் தித்திப்பான இனிப்பு இப்படி செய்து பாருங்க

சுரைக்காய் பர்ஃபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suraikai

Food

சுரைக்காய் பர்ஃபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான அளவு

தோல், விதை நீக்கி துருவிய சுரைக்காய் – ஒன்றரை கப்

தேங்காய்த் துருவல் – அரை கப்

மைதா மாவு- கால் கப்

பொட்டுக்கடலை மாவு – கால் கப்

நெய் – சிறிதளவு

பச்சை நிற ஃபுட் கலர் – 1டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்

சர்க்கரை – 1 கப்

கண்டன்ஸ்டு மில்க் – அரை கப்

நட்ஸ் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

சுரைக்காய் துருவலில் நீர் இல்லாமல் பிழிந்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும். வெறும் கடாயில் மைதா மாவு சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு பாகு காய்ச்சவும். அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், சுரைக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் கிளறவும். பிறகு ஃபுட் கலர், நெய், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் சுருள கிளறி இறக்கி நெய் (அ) வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே நட்ஸ் தூவி கொஞ்சம் ஆறியதும் தேவையான வடிவத்தில் நறுக்கிப் பரிமாறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment