சுரைக்காயில் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்து இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினைக் கட்டுக்குள் வைக்க சுரைக்காயை வாரம் இருமுறை சாப்பிடலாம். உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் சுரைக்காய் உதவுகிறது.
சுரைக்காய் தொடர்ந்து சாப்பிடுவதால், வயதாகும் சரும செல்கள் புத்துணர்வு அடையும். இதனால் சருமம் பொலிவு பெறும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த சுரைக்காயில் சுவையான தோசை எப்படி செய்வது என்பதை பாருங்கள்!
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 200 கிராம்
சுரைக்காய்த் துருவல் – 1 கப்
மிளகாய்– 5
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – ஒரு கொத்து
ஆவாரம் பூ – 1 பிடி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசியை நன்கு கழுவி, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசியுடன் சுரைக்காய்த் துருவல், மிளகாய், பெருங்காயத் தூள், உப்பு, ஆவாரம் பூ ஆகியவற்றைச் சேர்த்துத் தோசை மாவு பதத்துக்கு அரைக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம், கேரட் என எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம்.
அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், அதில் ஒரு கரண்டி மாவு எடுத்து உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“