தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க சுரைக்காய் ஜூஸ் உதவும் என்று கூறப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் நமது உடலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
இதில் குறைந்த கலோரிகள் இருக்கிறது. 100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் தான் இருக்கிறது. மேலும் 1 கிராம் கொழுப்பு சத்துதான் இருக்கிறது. மேலும் இதில் நார்சத்து இருக்கிறது. இது உங்களை அதிகம் சாப்பிடவிடாது. இது தொப்பை கொழுப்பை கரைக்கும்.
ஜூஸ் செய்யும் முறை
சுரைக்காய்யை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளுங்கள். இதில் எலுமிச்சை சாறு, உப்பு, பொதினா சேர்க்கவும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடியுங்கள்.