நம் உணவில் சேர்க்கக்கூடிய உப்பு பற்றி நமக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். ஆனால் எந்த உப்பு சாப்பிட வேண்டும். மேலும் பிபி, கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் நித்தியா தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
சிறுநீரக பாதிப்பு உள்ளர்கள் வாதம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள் உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பி.பி உள்ளது என்றாலே முதலில் உப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கல் உப்பு: ஒவ்வொரு மனிதனும் மூன்றிலிருந்து நான்கு கிராம் உள்ளே தான் கல் உப்பு பயன்படுத்த வேண்டும்.
கல் உப்பு எடுத்து முருங்கைக்கீரை இரண்டையும் சேர்த்து மண்சட்டியில் போட்டு வறுத்து அந்த உப்பை பயன்படுத்தலாம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் ஒரு கிராம் உப்புதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
கால் வீக்கம் இருப்பவர்கள் கல் உப்பை வறுத்து ஒரு துணியில் சுற்றி காலில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். வலி சரியாகும் வீக்கமும் குறையும்.
கல் உப்பு போட்டு மஞ்சள்தூள், குப்பைமேனி இலை சிறிது, தேங்காய் விட்டு அரைத்து அலர்ஜி, புண் உள்ள இடங்களில் வைக்கலாம்.
குளிக்கக் கூடிய தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள் தூள், படிகார நீர் ஆகியவற்றை சேர்த்து குளிக்கலாம். சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.
அதிகப்படியான உப்புகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல மற்றபடி முருங்கைக்கீரையில் வறுத்த கல் உப்பை பயன்படுத்தலாம்.
குளிப்பதற்கு, ஒத்தடம் கொடுப்பதற்கும் இதனை பயன்படுத்தலாம். ஆனால் உணவில் உப்பை கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.