இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அதில் மருந்து என்பது ஒரு வழி, மற்றவை நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் வழிமுறைகள் ஆகும். அப்படி பிபி அளவை கட்டுப்படுத்த ஒரு முக்கியமான ஆலோசனையை மருத்துவர் சாலை ஜெய கல்பனா, ஓம் சரவண பவ யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைப்பர்டென்ஷன் என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு ஆபத்தான நிலை. தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தம் ஆபத்தான நிலைக்கு உயரும் நிலை இது. இது காலப்போக்கில் இதயத்தை சேதப்படுத்தும் மற்றும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஒருமுறை கண்டறியப்பட்டால், அளிக்காமல் விட்டுவிடக்கூடாது, இல்லையெனில் அது ஆபத்தானதாக மாறும். அதிர்ஷ்டவசமாக, இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன. அதில் மருந்து என்பது ஒரு வழி, மற்றவை நீண்ட காலத்திற்கு அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் இயற்கை வைத்தியம். அந்த வகையில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உணவில் சுவையை குறைக்க வேண்டும் என்கிறார் மருத்துவர்.
அதாவது உணவில் நான் உப்பு அளவை குறைத்து விட்டேன். ஆனால் பிபி குறையவில்லை என்பார்கள். அவர்கள் உப்புடன் சேர்த்து கசப்பு சுவையையும் குறைக்க வேண்டும் என்கிறார் மருத்துவர். உப்பு, கசப்பு இரண்டும் அதிகமா இருந்தால் பிபி அதிகமாக இருக்கும்.
ஆயிரம் கேன்சர் நோயாளிகளை பார்த்திருப்பேன் அவர்களுக்கு இந்த ஒற்றுமை இருக்கும் | Actor Rajesh | Mudra
அந்த வகையில் உடலில் பிபி அளவை குறைக்க வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் குளியல் உடலில் கசப்பு சுவையை குறைக்கும். உணவாக கசப்பு சுவையை குறைப்பதை விட எண்ணெய் குளியல் வேகமாக பலன் அளிக்கும். கீழாநெல்லி தைலத்தை வைத்து எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால் உடலில் கசப்பு குறையும் மாறுதலை பார்க்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.