பிரெட் போண்டா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையானவை
கடலை மாவு – 150 கிராம்
பிரெட் துண்டுகள் – 10
உருளைக் கிழங்கு – 4
வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
கடுகு, கடலைப் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரெட்டை பொடித்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப் பருப்பு தாளித்து அதில் இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக பிரெட் தூள், உருளைக் கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். கடலை மாவை பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக் கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கரைத்த மாவில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“