பிள்ளைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் என்ன செய்து தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ 5 நிமிடத்தில் செய்யக்கூடிய, பிள்ளைகளுக்கு பிடித்தமான புதுசா ஒரு ஸ்நாக்ஸ் பிரட் சில்லி செய்து பாருங்கள்.
Bread chilli Snacks: மாலையில் பள்ளியைவிட்டு வீட்டுக்கு வந்ததும் பிள்ளைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் தரலாம் என்று யோசிக்கிறீர்களா? இதோ 5 நிமிடத்தில் செய்யக்கூடிய புதுசா ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் பிரட் சில்லி ட்ரை பண்ணி பாருங்கள்.
Advertisment
மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகள் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு போரடிக்கிறது என்று சொல்கிறார்களா? ஸ்நாக்ஸ் வேண்டாம் என்று அடம்பிடிக்கிறார்களா? அதனால், பிள்ளைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் என்ன செய்து தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக இதோ 5 நிமிடத்தில் செய்யக்கூடிய, பிள்ளைகளுக்கு பிடித்தமான புதுசா ஒரு ஸ்நாக்ஸ் பிரட் சில்லி செய்து பாருங்கள். சூப்பரா டேஸ்டியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
பிரட்
நெய் சிறிதளவு
சமையல் எண்ணெய்
சீரகம் சிறிதளவு
பூண்டு
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம்
தேவையான அளவு உப்பு
குடை மிளகாய் பாதி
மிளகாய் தூள்
சாட் மசலா தூள்
தக்காளி சாஸ்
சோயா சாஸ்
காஷ்மீர் சில்லி பவுடர்
செய்முறை:
பிரட் ஸ்லைகளை எடுத்துக்கொள்ளுங்கள், முதலில் பிரட்டில் இரண்டு பக்கமும் நெய் தடவிக் கொள்ளுங்கள். நான் ஸ்டிக் தவாவில் ரோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள், பிரட்டை கருக விட்டுவிடாதீர்கள்.
ரோஸ்ட் செய்த பிரட்டை சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வானலியில் சமையல் எண்ணெய் தேவையான அளவு விடுங்கள், எண்ணெய் காய்ந்த உடன், கொஞ்சம் சீரகம் போடுங்கள்.
சீரகம் பொடிந்த உடன் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை போட்டு வதக்குங்கள், பூண்டு பொரிந்த பிறகு, பொடிசாக கட் பண்ண கறிவேப்பிலை போடுங்கள், அடுத்து பெரிய வெங்காயம் நன்றாக பொடிசாக கட் பண்ணி போட்டு வதக்குங்கள். ரொம்ப முறுகலாக வதக்காதீர்கள், லேசாக வதக்குங்கள.
அடுத்து, குடை மிளகாயை பொடியாக கட் பண்ணி அதையும் சேர்ந்து வதக்குங்கள். குடை மிளகாய் ரொம்ப நேரம் வேகக் கூடாது, லேசாக வதக்குங்கள், அடுத்து, மிளகாய் தூள் அரை ஸ்பூன், சீரகத் தூள் அரை ஸ்பூன், சாட் மசாலா தூள் அரை ஸ்பூன் சேர்த்து எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவும் காரம் சேர்த்துக்கொள்ளலாம். இதனுடன் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். அரை டம்ப்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். காஷ்மீர் மிளகாய் தூள் சின்ன ஸ்பூனில் அரை கரண்டி சேர்த்துக்கொள்ளுங்கள், அரை டம்ப்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது, வதங்கி ஸ்பைசியாக வரும்போது, பிரட் துண்டுகளை சேர்த்து கிளறுங்கள். அவ்வளவுதான் டேஸ்டியான பிரட் சில்லி ஸ்நாக்ஸ் தயார். பிரட் சில்லி ஸ்நாக்ஸ் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“