பிரெட் கொண்டு பல்வேறு ரெசிபிக்கள் செய்து சாப்பிடலாம். பிரெட் சுவையாக இருப்பதால் பலரும் விரும்பி சாப்பிடுவர். வெள்ளை பிரெட் இல்லாமல் கோதுமை, பல தானியங்கள் நிறைந்த பிரெட் வகைகளும் உள்ளன. பிரெட் டோஸ்ட், பிரெட் ஆம்லெட் கேள்விபட்டிருப்போம். ஆனால் பிரெட் வைத்து தோவை கூட செய்யலாமாம். பிரெட் தோசை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - 10 துண்டுகள்
அரிசி மாவு - 1/2 கப்
ரவை - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கேரட் - 1
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். பொடி பொடியாக அரைக்க வேண்டியதில்லை. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கவும். அடுத்து, தயிர், தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், மிளகாய் தூள் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். தண்ணீர் சேர்த்து கலக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். இந்த கலவைகளை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி, சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவுதான் பிரெட் தோசை ரெடி. சுடச் சுடச் தக்காளி சட்னி உடன் சேர்த்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“