ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ரெஸிபி... பிரட் போதும் இப்படியும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து அசத்தலாம்!

வீட்டில் உள்ள பிரட் வைத்து சுவையான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டக்குன்னு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வீட்டில் உள்ள பிரட் வைத்து சுவையான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டக்குன்னு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bread pakoda

பிரெட் பக்கோடா

வீட்டில் மீதியாக இருக்கும் பிரட் வைத்து ஒரு அருமையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ் செய்யலாம். ஈவ்னிங் நேரத்தில் விளையாடிவிட்டு வரும் குழந்தைகளின் பசியை போக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியதாவது, 

Advertisment

தேவையான பொருட்கள் 
 
பிரட்
எண்ணெய்
உருளைக்கிழங்கு  
வெங்காயம்  
பச்சை மிளகாய்  
இஞ்சி  
மஞ்சள் தூள்
காஷ்மீரி மிளகாய் தூள்  
சீரக தூள்  
தனியா தூள்  
கரம் மசாலா தூள்  
உப்பு  
சாட் மசாலா தூள்  
கொத்தமல்லி இலை  
கடலை மாவு  
மிளகாய் தூள்   
ஓமம்  
பேக்கிங் சோடா  

செய்முறை 

ஒரு அகலமான பானில் எண்ணெய் ஊற்றி  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.

Advertisment
Advertisements

பின்னர் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து மசித்து சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்தால் உருளைக்கிழங்கு மசாலா தயார் செய்து வைக்கவும்.

இரண்டு பிரட் துண்டுகளை எடுத்து அதில் ஒரு துண்டின் மீது உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி அதன் மேலே மற்றொரு பிரட் துண்டை வைத்து அழுத்தி  இரண்டாக கட் செய்யவும்.

பிரட் பக்கோடா | Bread Pakoda Recipe In Tamil | Tea Time Snacks | Pakoda Recipes | Evening Snacks

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ஓமம் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல்  கரைக்கவும். பேக்கிங் சோடா சேர்த்து கலந்து விடவும்.

கட்  செய்த சான்விச்சை தயார் செய்த கடலை மாவு கலவையில் முக்கி  எடுத்து சூடான எண்ணையில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்தால் சுவையான பிரட் பக்கோடா தயாராகிவிடும். 

bread Healthy light weight snacks to eat in this season

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: