பிட்சா சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைப்போம், ஆனால் உடலுக்கு நல்லதாக இருக்காது என்று தவிர்த்து விடுவோம். கடைகளில் நல்ல பொருட்கள் கொண்டு தயாரிக்கிறார்களா எனப் பல சந்தேகம் இருக்கும். ஆனால் வீட்டிலேயே பீட்சா செய்தால் எப்படி இருக்கும். ஆம் வீட்டில் எளிய முறையில் பிரட் பிட்சா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரட் - 4 துண்டுகள்
தக்காளி கெட்சப் - தேவையான அளவு
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
சீஸ் - தேவையான அளவு (துருவியது)
ஓரிகனோ - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஓரிகனோ உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முதலில் டோஸ்டர் அல்லது தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து, தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் மேல் சிறிது தக்காளி கெட்சப்பை தடவ வேண்டும். பிறகு அதன் மேல் 1 ஸ்பூன் இந்த காய்கறி கலவையை பரப்ப வேண்டும். அதன் பின் அவற்றின் மேல் சிறிது துருவிய சீஸைப் பரப்ப வேண்டும். பின்னர் அந்த பிரட் மீது மற்றொரு பிரட் கொண்டு மூட வேண்டும். அதை அப்படியே தோசைக்கல்லின் மீது வைத்து மிதமான தீயில் 2 நிமிடம் வைக்க வேண்டும். சீஸ் உருகி வந்ததும் எடுத்தால் சுவையான பிரட் பிட்சா தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/