ஒருமுறை வீட்டில், இப்படி மொறு மொறு பிரட் சமோசா செய்து சாப்பிடுங்க. வெங்கடேஷ் பட் ரெசிபி.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் எண்ணெய்
கால் ஸ்பூன் சீரகம்
கொஞ்சம் இஞ்சி – பூண்டு
4 பச்சை மிளகாய் நறுக்கியது
2 வெங்காயம்
3 உருளைக்கிழங்கு வேக வைத்தது
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
கால் ஸ்பூன் மிளகாய் பொடி
கால் ஸ்பூன் கரம் மசாலா
உப்பு
கொத்தமல்லி இலை
பொறிக்கும் அளவு எண்ணெய்
2 ஸ்பூன் மைதா மாவு
கொஞ்சம் தண்ணீர்
6 பிரட்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், சீரகம், இஞ்சி- பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து கிளரவும். அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளரவும். வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி அதை இதில் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிரட்டின் ஓரங்களை வெட்ட வேண்டும். தொடர்ந்து அதன் மீது உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். மைதாமாவில் தண்ணீர் சேர்த்து அதை பிரட்டின் ஓரத்தில் பூச வேண்டும். மறுபக்கத்தை ஒட்டவும். தொடர்ந்து ஒட்டிய பகுதியின் மீது சிறிதாக மைதா கலவையை பூச வேண்டும். தொடர்ந்து எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“