தேவையான பொருட்கள்
பிரெட்
தயிர்
உப்பு
ரவை
அரிசி மாவு
குக்கிங் சோடா
இஞ்சி
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
வெங்காயம்
செய்முறை
தேவையான அளவு பிரெட் எடுத்து அதன் மைய பகுதியான வெள்ளை பிரெட் பகுதிகளை துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதில் உப்பு, ரவை, அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்னர் இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் நசுக்கிய இஞ்சியையும் சேர்த்து நன்கு மிக்ஸிங் செய்து ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். இதில் குறிப்பாக பிரெட் உடைந்து உதிரியாக இருக்க வேண்டும் கட்டி இருக்க கூடாது.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் மெதுவடை மாதிரி தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் பிரட் பெதுவடை ரெடியாகி விடும்.
இதனை டீ, மோர் உடன் சேர்த்து சாப்பிடலாம். இதை சட்னி, சாம்பாரில் தொட்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“