தினசரி நிறைய பேரின் வீட்டில் காலை உணவு இட்லி, தோசையாகவே இருக்கும். அப்படி எப்பவும் இட்லி தோசை சாப்பிட்டு ஃபோர் அடித்து போனவர்கள் ஒரு முறை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்கள்.
வெறும் முட்டை, கோதுமை மாவு வைத்து சூப்பரான ஒரு உணவு அல்லது ஸ்நாக்ஸ் டக்குனு செய்து விடலாம். குழந்தைகள் கூட வேண்டாம் என்று சொல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இதை அவ்வப்போது சூடாக செய்து சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு
முட்டை
எண்ணெய்
வெங்காயம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
சீரகத்தூள்
மிளகுத்தூள்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு கப்பில் தேவையான அளவு கோதுமை மாவு எடுத்து உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் சிறிது எண்ணெய் ஊற்றி மாவு பிசைந்து ஊற வைக்கவும்.
ஒரு கப்பில் முட்டை உடைத்து ஊற்றி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி தழை,கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும்.
எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க/Mughlai Egg Paratha/sujis recipes/Tamil
அதில் சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் எப்போதும் போல சப்பாத்தி மாவு தேய்த்துக் கொள்ளவும். மாவு நன்கு மெல்லிசாக இருக்க வேண்டும். தோசைக்கல்லில் சப்பாத்தி மாவை போட்டு அதற்கு மேல் இந்த முட்டை கலவையை சேர்த்து நான்கு பக்கமும் மூடி எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்.
இதற்கு தக்காளி சாஸ் வைத்து சாப்பிடலாம். இல்லையென்றால் எப்போதும் போல குருமா வைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“