கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது.
கத்தரிக்காய் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது. அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரிடம் கேட்டுவிட்டு சாப்பிடலாம். வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல் முதலியவற்றைக் குணப்படுத்தும்.
எனவே வாரத்தில் இரண்டு முறை கத்தரிக்காய் சாப்பிடலாம். இந்த கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. அதாவது முத்தன கத்தரிக்காய் சாப்பிடுவதை விட பிஞ்சு கத்தரிக்காய் சமைத்து சாப்பிடுவதே நல்லது. கத்தரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்
சிவப்பு மிளகாய்
வெங்காயம்
கடுகு
உளுந்து பருப்பு
புளி
தேங்காய்
எண்ணெய்
பெருங்காயம்
கறிவேப்பிலை
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை :
முதலில் கத்திரிகாய்க்கு எண்ணெய் தடவி அடுப்பு மீது கத்திரிக்காயை ஒரு நடுத்தர தீயில் வைத்து வாட்டி எடுக்கவும்.தோல் வெளிவரும் வரை அல்லது 20 நிமிடங்கள் வரை புகைத்து கொள்ளவும்.
பின்னர் கத்திரிக்காயை ஆற வைத்து தோல் உறித்து வைக்கவும். பின்னர் ஒரு கடாயை எடுத்து. கடுகு,உளுந்து,வெங்காயம், சிவப்பு மிளகாய் சேர்க்கவும். பின்னர் தேங்காய் மற்றும் புளி, அவற்றை நன்கு வறுக்கவும்.
பின்னர் மசித்த கத்தரிக்காயைச் சேர்த்து நன்கு அரைத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் கலந்து வைக்கவும். எப்போதும் போல அதில் தாளித்து கொட்டினால் போதும் கத்தரிக்காய் சட்னி ரெடியாகிவிடும்.
இதனை சுடு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஊறுகாய் போலவும் சாப்பாட்டுடன் வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“