கத்திரிக்காயை நாம் சாதரண ஒரு காய்கறி என்று நினைக்கிறோம். ஆனால் இதில் இருக்கும் சத்துகளை நினைத்தால், உங்களுக்கே ஆச்சிரியமாக இருக்கும்.
100 கிராம் கத்திரிக்காயில், புரோட்டீன் 0.98 கிராம், நார்சத்து 3 கிராம், 9 மில்லி கிராம் கால்சியம், மெக்னீஷியம் 14 மில்லி கிராம், மேலும் இதில் பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, ஆகியவை உள்ளன.
உடல் பருமனாக இருக்கும் நபர்களுக்கு கத்திரிக்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது. மேலும் இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்க உதவும்.

மேலும் இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அசீரணம் ஏற்படாமல் தடுத்து சரியாக ஜீரணமாக உதவுகிறது. இதில் இருக்கும் நர்சத்து உணவை மெதுவாக ஜீரணிக்க வைப்பதால், உடல் எடை கூடாது.
இதில் இருக்கும் பாலிபினால்ஸ் (polyphenols) அதிக எடை போடாமல் பார்த்துகொள்கிறது. கொஞ்சம் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கத்திரிக்காயை சாப்பிடலாம்.