தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
பூண்டு
வெங்காயம்
காய்ந்த மிளகாய் - 10 எண்
தக்காளி
கத்தரி
உருளைக்கிழங்கு
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள்
மஞ்சள் தூள்
உப்பு
கரி மசாலா தூள்
கறிவேப்பிலை & கொத்தமல்லி இலை
பெருங்காயம்
இஞ்சி
பச்சை மிளகாய்
செய்முறை
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவெ சேர்த்து வதக்கி விடவும்.
பின்னர் இதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அனைத்தும் பச்சை வாசம் நீங்கும் அளவு நன்கு வதங்க வேண்டும்.
பின்னர் இதில் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்கவும். சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கலாம். பிறகு தனி மசாலா தேவையான அளவு சேர்த்து மசாலா பச்சை வாசனை நீங்கும் வரை தக்காளி வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்க வைக்க வேண்டும்.
ஒரே அளவில் நறுக்கிய கத்தரிக்காயை முதலில் சேர்க்க வேண்டும். பின்னர் கத்திரிக்காயை ஒரு ஐந்து நிமிடம் வேக விட்டு அதற்குப் பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். மேலே கொத்தமல்லி தழை தூவி சிறிது தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய் உருளைக்கிழங்கு வேகும் வரை நன்கு கலந்து வேக விடவும்.
பின்னர் காய் வெந்த உடன் இறக்கி சாப்பிடலாம். தயிர் சாதம், பருப்பு சாதத்திற்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“