கத்திரியில் குழம்பு மட்டுமல்ல ரசமும் செய்யலாமாம்; ரெசிபி எப்படி தெரியுமா?

கத்தரிக்காய் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

கத்தரிக்காய் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
brinjal

கத்தரிக்காய் ரசம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

கத்தரிக்காய்- 1/4 கிலோ 
எண்ணெய்- 2 ஸ்பூன் 
கடுகு- 1 ஸ்பூன் 
மிளகாய்- 2 
சீரகம்- 1 ஸ்பூன் 
பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை- தேவையான அளவு
புளி கரைசல்- 1/2 கப் 
வெங்காயம்- 1 
பச்சை மிளகாய்- 2 
வெல்லம்- 2 ஸ்பூன் 
கொத்தமல்லி இலை- சிறிதளவு

 செய்முறை

முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை பற்ற வைத்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காயை சுட்டு எடுத்து கொள்ளவும். பிறகு சுட்டு எடுத்த கத்திரியின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

Advertisment
Advertisements

இப்போது, கத்திரிக்காயை மசித்து கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனுடன் வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கரைக்கவும்.  அடுத்தாக எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்க்கவும். மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: