நம் வீடுகளில் காலை, இரவு நேரத்தில் தோசை, இட்லி என டிபன் உணவு சாப்பிடுவோம். மதியம் நிச்சயம் சாப்பாடு, குழம்பு, காய்கறி உடன் மினி மீல்ஸ் சாப்பிட தான் விரும்புவோம். அப்படி மதிய உணவிற்கு சுவையான உணவு கத்திரிக்காய் தொக்கு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சிம்பிள் ரெசிபி தான் கண்டிப்பாக ட்ரை செய்து பாருங்க
தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கத்திரிக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும். வெல்லத்தை உடைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளி, உப்பு சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
இப்போது கத்திரிக்காயை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து
புளிச்சாறு ஊற்றி கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் வெந்ததும், அதில் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் தொக்கு ரெடி. சூடான சோற்றில் ஊற்றி சாப்பிடலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/