அம்மாவிடம் செஃப் வெங்கடேஷ் பட் அடிக்கடி கேட்கும் டிஷ்... கத்தரிக்காய் வச்சு இப்படி ட்ரை பண்ணுங்க!
செஃப் வெங்கடேஷ் பட் விரும்பி சாப்பிடும் கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்வது என இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ருசியான கத்தரிக்காய் தொக்கு ரெசிபியை எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய், கடலை எண்ணெய், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், தக்காளி, புளி, உப்பு, சாம்பார் தூள் நல்லெண்ணெய், கொத்தமல்லி.
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கத்தரிக்காயை ஆறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இவற்றை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடலாம். இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 5 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய், ஒன்றரை ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது, வெட்டி வைத்திருந்த கத்திரிக்காய்களையும் இதில் போட்டு வதக்க வேண்டும். கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் அவற்றை எண்ணெய்யில் இருந்து வெளியே எடுத்து விடலாம். இப்போது ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி எண்ணெய்யில் போட்டு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன் நிறத்திற்கு மாறியதும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்கள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். இவற்றை 5 நிமிடங்கள் வதக்கியதும், தக்காளியை அரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
இறுதியாக அரை கிளாஸ் புளி தண்ணீர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இவை கொதித்ததும் தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு டீஸ்பூன் கருப்பட்டி சேர்த்து கலக்க வேண்டும்.
இவை 5 நிமிடங்கள் கொதித்த பின்னர், முதலில் வேகவைத்த கத்திரிக்காய்களை சேர்த்து கிளற வேண்டும். இதன் பின்னர், 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் ருசியான கத்தரிக்காய் தொக்கு தயாராகி விடும்.