கத்தரி வத்தக் குழம்பு சுடு சோறு, இட்லிக்கு வைத்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். கத்தரி வத்தக் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு – கால் கப்
கத்தரி வத்தல் – 10
சின்ன வெங்காயம் – 1 கப்
தக்காளி – 2
புளி – சிறிதளவு
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
தனியாதூள் – 2டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – கால் கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை வேக வைத்து எடுக்கவும். பருப்பு குழையாமல் வேக வைக்கவும். புளி கரைத்து வைக்கவும். கத்தரி வத்தலை, அரை கப் கொதிக்கும் நீரில் ஊற வையுங்கள். வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். தக்காளியையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கி, புளித் தண்ணீரை சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், உப்புசேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிடுங்கள். பிறகு, கத்தரி வத்தலைச் சேர்த்து, மேலும் 5நிமிடம் கொதிக்க விட்டு வேகவைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். எல்லாம் நன்றாக கலந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். அவ்வளவு தான் நாக்கில் எச்சில் ஊறும் சுவையான கத்தரி வத்தக் குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“