குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடவும் சட்டென காலியாக லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
சீரகம்
தேங்காய்
எண்ணெய்
கடுகு
சீரகம்
பெரிய வெங்காயம்
தக்காளி
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காய் சாதம்
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதில் சிறிது உப்பு சேர்த்து வதக்கி அதில் நறுக்கிய கத்தரிக்காய் அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து அதனை எண்ணெயிலேயே வேக வைத்து அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறி மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் கத்திரிக்காய் சாதம் ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“