உடல் எடை குறைக்கும்போது எந்த உணவு சாப்பிட வேண்டுமா என்று நாம் யோசித்திக் கொண்டே இருப்போம். வெள்ளை அரிசி சாதத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். ஆனால் உமி உள்ள கைகுத்தல் அரிசி ஒரு மாற்றாக இருக்கும் அதை brown rice என்று சொல்வார்கள். உமி அதிகம் இருப்பதால் இதை சமைக்கும்போது, நாம் குக்கரில் அதிக விசில் விட வேண்டும். இந்த அரிசியில் அதிக நார்சத்து இருப்பதால் இது கொழுப்பை கரைக்கும். கைகுத்தல் அரிசியில் புலாவ் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். உடல் எடை குறைப்பதோடு, ருசியையும் விட்டு கொடுக்க தேவையில்லை.
தேவையான பொருட்கள்
1 கப் கைகுத்தல் அரிசி
2 ஸ்பூன் நெய்
அரை ஸ்பூன் சீரகம்
2 ½ கப் தண்ணீர்
2 வெங்காயம் நறுக்கியது
பூண்டு , இஞ்சி அரைத்தது.
பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைகிழங்கு, கேரட்
கரம் மசாலா, பெப்பர், மிளகாய் தூள், உப்பு
கொத்தமல்லி
பட்டை , கிராம்பு, ஏலக்காய்
செய்முறை :
முதலில் கைகுத்தல் அரிசியை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும். அதில் இஞ்சி, பூண்டு விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். தொடர்ந்து காய்கறிகள் அனைத்தும் சேர்த்து மஞ்சள் பொடி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, பெப்பர், உப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து ஊற வைத்திருந்த அரிசியை சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்த்து, 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். ஒரு சூப்பரான புலாவ் ரெடி.