கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
இந்த சம்மருக்கு பிள்ளைகளுக்கு முட்டை இல்லாத பிரௌனி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பின்பு அதின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை கலந்துவிடவும்.
பின்பு சாக்லேட்டை இறக்கி வைத்து அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும். பின்பு தயிர் சேர்த்து கலந்துவிடவும். சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
பிறகு சாக்லேட் கலவையில் சலித்த மாவை சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். பின்பு கேக் அச்சில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும். ஓவனை 180 டிகிரியில் சூடு செய்து மாவை வைத்து 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும். அவ்வளவு தான் முட்டையில்லாத பிரௌனி தயார்.