இந்நிலையில் நாம் உடல் எடை குறைக்கும் போது பால் சமந்தமான பொருட்களை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் . இந்நிலையில் எருமைப்பால் குடிப்பதால் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
100 கிராம் எருமைப்பாலில் : புரோட்டீன் 3.75 கிராம், 6.89 கிராம் கொழுப்பு சத்து, கார்போஹைட்ரேட் 5.18 கிராம், தண்ணீர் 83.4 கிராம். கால்சியம், மெக்னீஷியம், இரும்பு சத்து, சோடியம், போட்டாஷியம் இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 97 கலோரிகளை கொண்டது. இதில் இருக்கும் ஒரு வகை பாக்ட்டீரியா, உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும். இதில் இருக்கும் புரோபயாட்டிக்ஸ் உடல் எடையை சீராக வைத்திருக்கும்.

பசும் பாலைவிட எருமைப்பாலில்தான் புரோட்டின், கொழுப்பு சத்து, லாக்டோஸ் அதிகம். இந்நிலையில் நாம் அதிகமாக புரத சத்து எடுத்துக்கொண்டால், அதிகமாக சாப்பிடும் எண்ணம் ஏற்படாது.
இந்நிலையில் கால்சியம் சத்து குறைவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எருமைப்பால் குடித்தால் தீர்வாக இருக்கும். இந்நிலையில் நாம் காலை உணவுடன் ஒரு கிளாஸ் எருமைப்பால் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் பால் குடிப்பதுதான் சரியான தேர்வாக இருக்கும்.