எப்போதும் போல் இல்லாமல் சுவையான பன் தோசை வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் த்மிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தோல் சீவிய உருளைக்கிழங்கை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் ரவை, தயிர் சேர்த்து அரைத்து இதனை ஒரு கப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தலை, சீரகம், உப்பு, சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். தோசை மாவு பதத்திற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமோ சேர்த்து கரைத்துக் கொள்ளவும். ஒரு பத்து முதல் 15 நிமிடம் இதனை அப்படியே வைத்துவிட்டு விடவும்.
பின்னர் ஒரு குழி கரண்டி அல்லது தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான பன் தோசை ரெடி ஆகிவிடும்.