scorecardresearch

குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு ரெசிபி

நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு என்ன உணவு சமைத்து கொடுக்க வேண்டும் என்று யோசித்தே, நேரம் வீணாகிவிடும். இந்நிலையில் வீட்டில் செய்து கொடுப்பதுதான் அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் வீட்டிலேயே எப்படி பட்டர் முருக்கு செய்யலாம் என்பத தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப், கடலை மாவு – 1/2 கப், பொட்டுக்கடலை மாவு – 1/4 கப், உப்பு – 3/4 ஸ்பூன், வெண்ணை – 1/4 கப், சீரகம் – 1 ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், சீரகம், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்கைகளால் நன்கு கலந்து விடவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மென்மையாக பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி,  சூடானதும், முறுக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிந்துவிடவும்.இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பட்டர் முறுக்கு தயாராகி விடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Butter murukku recipe in home