தேவையான பொருட்கள்
எண்ணெய்
உளுத்தம் பருப்பு
இஞ்சி
புளி
உப்பு
காய்ந்த மிளகாய்
நிலக்கடலை
முட்டைகோஸ்
கொத்தமல்லி தழை
கருவேப்பிலை
கடுகு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, சிறிய இஞ்சி ஒரு துண்டு, புளி, நிலக்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதில் தேவையான அளவு முட்டைக்கோஸ் சேர்த்து கைவிடாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அது ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் மற்றும் தேவையான அளவு கல் உப்பு போட்டு கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழையை சேர்த்து மீண்டும் ஒரு அடிமட்டம் அரைத்துக் கொள்ளவும்.அதனை எப்போதும் போல தாளித்து இட்லி தோசை மற்றும் சூடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“