இட்லி, தோசைக்கு புதுவிதமான முட்டைக்கோஸில் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டைக் கோஸ் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1/2
பூண்டு – 2 பல்
சிவப்பு மிளகாய் – 2
புளி – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
முதலில் முட்டைக் கோஸை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இப்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு போட்டு வர மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் முட்டைக் கோஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுப்பை அணைத்து இறக்கி ஆறவிடவும், ஆறிய பின் மிக்ஸியில் அரைக்கவும். அடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய்யில் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான முட்டைக் கோஸ் சட்னி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“we