பர்பிள் முட்டைக்கோஸ் ஜூஸ்... காலையில் வெறும் வயிற்றில் குடிச்சா இவ்ளோ நன்மை இருக்கு: டாக்டர் வேணி
அல்சர் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் வேணி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளக் கூடிய உணவு முறை மாற்றம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
அல்சர் பிரச்சனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர் வேணி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளக் கூடிய உணவு முறை மாற்றம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
அல்சர் என்று சொல்லப்படக் கூடிய வயிற்றுப் புண் பாதிப்பு தற்போது நிறைய பேருக்கு உள்ளது. சரியாக உணவு எடுத்துக் கொள்ளாதது மட்டுமே இதற்கு காரணமாக இருக்காது. அதிகமாக டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பழக்கம், இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் உணவு எடுத்துக் கொள்வது உள்ளிட்டவையும் இதற்கு காரணமாக அமையும் என்று மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் காலை எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பின்னர், சிறிது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு பின்னர் காலை உணவை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக முட்டைக் கோஸ் ஜூஸ் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் வேணி பரிந்துரைக்கிறார்.
குறிப்பாக, பர்பிள் நிறத்தில் இருக்கும் முட்டைக் கோஸை நாம் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், இதில் அந்தோசைனன்சிஸ் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த முட்டைக் கோசை சாப்பிடும் போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் பாதிப்பு குறைக்கப்படுகிறது.
மேலும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த முட்டைக் கோஸ் பெரிதும் உதவுகிறது. இதேபோல், வேகமாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள், அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் அனைவரும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
அந்த வகையில் முட்டைக் கோஸ் ஜூஸ் தயாரிப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சை சாறு பிழிந்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். இந்த தண்ணீரில் முட்டைக் கோசை 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதன் பின்னர், முட்டைக் கோசை சாதாரண தண்ணீரில் அலச வேண்டும்.
இதையடுத்து, முட்டைக் கோசை சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து குடிக்கலாம். ஒரு நாளைக்கு சுமார் 300 மில்லி லிட்டர் அளவிற்கு இதனை குடிக்கலாம். இதில் கேரட் அல்லது பீட்ரூட் போன்றவற்றையும் சேர்த்து ஜூஸாக குடிக்கலாம். கூடுமானவரை இதனை வடிகட்டாமல் குடிக்க வேண்டும் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார்.
இது அல்சர் பிரச்சனையை தீர்ப்பது மட்டுமல்லாமல் வேறு சில நன்மைகளையும் அளிப்பதாக மருத்துவர் வேணி குறிப்பிடுகிறார்.
நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.