தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. மழை நேரத்தில் அம்மாவிடம் சூடாக ஏதாவது செஞ்சு தரச் சொல்லி பலரும் கேட்டிருப்போம். அந்த நேரத்தில் சூடாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவது சுவையாக இருக்கும். இந்தமாறி நேரத்தில் ஈஸியா முட்டைக்கோஸ் பக்கோடா செய்து அசத்துங்க. வீட்டிலேயே 15 நிமிடத்தில் சட்டென்று செய்யலாம்.
தேவையான பொருட்கள்
நறுக்கிய முட்டைகோஸ் - 2 கப்
கடலை மாவு - 1/2 கப்
கார்ன்ஃப்ளார் மாவு (அ) அரிசி மாவு - 1/2 கப்
சோடா உப்பு - 1 சிட்டிகை
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு, பெருங்காயம்,மிளகாய் தூள் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் அதே அளவில் சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் தேவைக்கேற்ப தெளித்து பிசையவும். பக்கோடா என்பதால் உதிரும் அளவு பக்குவத்தில் மாவு கலக்க வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவு கலவையை உதிரி உதிரியாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும். பக்கோடா வெந்ததும் கரண்டு கொண்டு எடுக்கவும். இப்போது மொறு மொறு முட்டைக்கோஸ் பக்கோடா ரெடி. சட்னி, தக்காளி சாஸ் கொண்டு பரிமாறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil