முட்டைகோஸ் சாதம் செய்வது குறித்து பார்ப்போம்.
துருவிய முட்டைகோஸ் – 1 கப்
வடித்த சாதம் – 1 கப்
கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
பாசிப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைத்தது)
மிளகு – சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சி – ஒரு டேபி ள்ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கொத்த மல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் உதிர் உதிரியால் வரும். இப்போது கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பு பொருட்கள் போட்டு தாளித்து பட்டை, மிளகு – சீரகத்தூள், கடலை பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறவும்.
அடுத்து ஊற வைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் கிளரவும். இந்த முட்டைகோஸ் மசாலாவை வேக வைத்த சாதத்தில் போட்டுப் கிளறி கொத்த மல்லித்தழை தூவி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சாதம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“