குழந்தைகளுக்கான மதிய சாப்பாட்டிற்கு ஒரு ருசியான ஈஸியாக செய்யக்கூடிய சாதம் தான் முட்டைக்கோஸ் சாதம் அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். முட்டைக்கோஸ் சாப்பிட விருப்பமில்லாதவர்கள் இதை தவிர்த்து கொள்ளலாம். மற்றப்டி இந்த முட்டைகோஸ் சாதத்தை வாரத்தில் ஒருமுறை லஞ்ச் பாக்ஸ்க்கு செய்து அனுப்பலாம்.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ்
வெங்காயம்
இஞ்சி, பூண்டு
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
எண்ணெய்
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
கரம் மசாலா தூள்
மிளகு தூள்
பச்சை பட்டாணி
செய்முறை
முதலில் சாதத்தை வடித்து வைத்து கொள்ள வேண்டும். அடுத்து வெங்காயம் எடுத்து அதனை நீட்ட வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் வட்ட வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். சிறிதளவு முட்டைகோஸை நீட்ட வாக்கில் எவ்வளவு நைசாக கட் செய்ய முடியுமோ அவ்வளவு நைசாக கட் செய்து கொள்ளவும்.
முட்டைகோஸ் சாதம் செய்வதற்கு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து இதனுடன் கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயமானது சிவந்த நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் பச்சை பட்டாணியை ஊற வைத்து அதனை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதனையும் வெங்காயத்துடன் சேர்க்க வேண்டும்.
பின் அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து வேக விட வேண்டும். மசாலாவில் பச்சை வாசனை மற்றும் முட்டைகோஸ் வெந்த பிறகு அதில் வேக வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறினால் முட்டைகோஸ் சாதம் ரெடி.