சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் கட்லட் வடை; சிம்பிள் ரெசிபி இங்கே
அரை கப் முட்டைகோஸ் இருந்தால் டக்குனு செய்து அசத்தி விடக் கூடிய இந்த வடை ரெசிபியை எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம்.
அரை கப் முட்டைகோஸ் இருந்தால் டக்குனு செய்து அசத்தி விடக் கூடிய இந்த வடை ரெசிபியை எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம்.
சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைல் கட்லட் வடை!
வடை என்றாலே நமக்கு முதலில் மெதுவடை மற்றும் மசால் வடை தான் நினைவுக்கு வரும். விதவிதமான வடை வகைகளில் முட்டைகோஸ் வடை ரொம்பவும் வித்தியாசமான மற்றும் அருமையான சுவையுடன் இருக்கும். அரை கப் முட்டைகோஸ் இருந்தால் டக்குனு செய்து அசத்தி விடக் கூடிய இந்த வடை ரெசிபியை எப்படி தயார் செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம். இதனை பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் சமையல் குறிப்புகளை பதிவேற்றி உள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ், தேங்காய் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு தேவையான அளவு, மல்லித்தழை, தன்யா பொடி, கடலை மாவு, கடலை எண்ணெய்.
செய்முறை:
Advertisment
Advertisements
முட்டைக்கோஸ் வடை செய்ய தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு மூடி தேங்காயை நன்கு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு டேபிள்ஸ்பூன் தன்யா பொடி, அரை ஸ்பூன் கரம் மசாலா பொடி, அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் 15 கிராம் புளி, கொத்தமல்லி சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கொர கொர பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெருங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வையுங்கள். அரை கைப்பிடி அளவிற்கு மல்லி தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வையுங்கள். அரை கப் வரும் அளவிற்கு முட்டைகோஸை மெல்லியதாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு மிக்ஸிங் பௌல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரைத்து வைக்கப்பட்டுள்ள பேஸ்டை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையுடன் இப்பொழுது 2டேபிள் ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பிசைந்து கொள்ள வேண்டும்.
வெங்காயத்தில் இருக்கும் ஈரப்பதமே நீர் விட ஆரம்பிக்கும். கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு ஒருசேர பிசைந்து வையுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் வடை சுடும் அளவிற்கு தேவையான எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் மாவை ஒவ்வொன்றாக வடை போல தட்டி போடுங்கள். மிதமான தீயில் இருபுறமும் நன்கு பொன்னிறமாக சிவந்து வந்ததும், அப்படியே எடுத்து சுடச் சுட டீ அல்லது காபியுடன் பரிமாற வேண்டியது தான்.
ரொம்பவே சுவையாக இருக்கக் கூடிய இந்த கிரிஸ்பியான மொறு மொறு முட்டைகோஸ் வடை சுவையில் அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். முட்டைகோஸ் விரும்பாதவர்கள் கூட, இந்த மாதிரி வடை செய்து கொடுக்கும் பொழுது விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சுவையாக இருக்கக் கூடிய இந்த முட்டைகோஸ் வடை நீங்களும் உங்க வீட்டில் இதே போல செய்து பார்த்து அசத்துங்கள். மாலை நேரத்தில் சிற்றுண்டியாக மட்டும் அல்லாமல் சாம்பார், தயிர் சாதத்துக்கு தொட்டுக்கவும் சூப்பராக இருக்கும்.