scorecardresearch

தொடர்ந்து கை, கால் வலி இருக்கா? இந்த கால்சியம் சத்து உணவுகளை நீங்க சாப்பிட்டே ஆகனும்

குறிப்பாக பால் பொருட்களை நாம் சாப்பிட வேண்டும். பால், சீஸ், தயிர் நாம் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் அதிகம் இருக்கிறது.

இந்த கால்சியம் சத்து உணவுகளை நீங்க சாப்பிட்டே ஆகனும்
இந்த கால்சியம் சத்து உணவுகளை நீங்க சாப்பிட்டே ஆகனும்

நமது எலும்பு வலுவாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயம் நாம், கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்நிலையில் நாம் தொடர்ந்து கால்சியம் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிட்டால் நிச்சியம் அது எலும்பை மீண்டும் பலவீனமாக்கும்.

குறிப்பாக பால் பொருட்களை நாம் சாப்பிட வேண்டும். பால், சீஸ்,  தயிர் நாம்  சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் அதிகம் இருக்கிறது. குறிப்பாக குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்களை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

குறிப்பாக வெந்தயம் மற்றும் கீரையில் கால்சியம் இருக்கிறது. 100 கிராம் கீரையில் 99 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதுபோல இதில் வைட்டமி கே இருப்பதாலும் எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

குறிப்பாக சால்மன் மற்றும் சார்டினஸ் மீன் வகைகளில் கால்சியம் இருக்கிறது.  மேலும் சால்மன் மீனில் வைட்டமின் டி இருக்கிறது. வைட்டமின் டி, நமது உடலை கால்சியம் சத்தை எடுத்துக்கொள்ள உதவுகிறது.  இதில் இருக்கும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் எலும்பை வலுவாக்குகிறது.

பாதாம் மற்றும் சியா விதைகளில் கால்சியம் இருக்கிறது. ஆனால் இதற்காக அதிகமாக நட்ஸை சாப்பிடக்கூடாது.

ராஜ்மா, கொண்டைக்கடலை, பீன்ஸில் அதிக கால்சியம் இருக்கிறது. மேலும் இதில் மெக்னிசியம், பாஸ்பரஸ் இருக்கிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Calcium foods for joint pain

Best of Express