சர்க்கரை சேர்க்காத பிளாக் காப்பி குடித்தால், கர்ப்ப காலத்தில் வரும் சரக்கரை நோய் வாராமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு ஆய்வில் புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வானது 4,500 பெண்களிடம் நடத்தப்பட்டது ( வெளிநாட்டு பெண்கள்).இவர்களுக்கு கர்ப்ப காலத்தில்தான் சர்ககரை நோய் ஏற்பட்டுள்ளது. இவர்களை ஆய்வு செய்து பார்க்கையில், சர்க்கரை கலக்காத பிளாக் காப்பியை குடித்தால் டைப் 2 டயபட்டிஸ் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பிளாக் காப்பி குடிப்பவர்களுக்கு டைப் 2 டயபட்டிஸ் வரும் வாய்ப்பு 10 முதல் 55 % குறையும் என்று ஆய்வு கூறுகிறது.

ஆனால் இந்த ஆய்வை வைத்து நாம் பிளாக் காப்பியை அதிகமாக குடிக்க முடியாது. இது தொடர்பாக மருத்துவர் மோகன் கூறுகையில் இந்தியாவின் வாழ்வு முறையில் நாம் காப்பி என்றாலே அதில் பால் மற்றும் அதிக சர்க்கரை சேர்த்து குடிப்போம். கூடுதலாக சமோசா, வடை, பிஸ்கட் என்று சாப்பிடுவோம். இதனால் சர்க்கரை நோய் அதிகரிக்கத்தான் செய்யும் . இதனால் இந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவின் உணவு முறைக்கு சரியாக பொருந்தாது என்று கூறியுள்ளார்.