சர்க்கரை நோயாளிகள் பொதுவாக தேன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதில் உண்மை இருந்தாலும், சில ஆய்வுகள் தேனில் இருக்கும் நன்மைகளை நமக்கு எடுத்துரைக்கிறது.
இந்நிலையில் இயற்கையான முறையில் கிடைக்கும் தேனில் அதிக வைட்டமின்ஸ் இருக்கிறது. மேலும் இது காயங்களை குணப்படுத்துகிறது. மேலும் சில நோய் அறிகுறிகளை இது குறைக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. மேலும் இதயத்தின் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இந்நிலையில் தினமும் 35 முதல் 45 கிராம் இயற்கையான தேனை டீ அல்லது தனியாக சாப்பிட்டால், அது உடலுக்கு கூடுதல் நன்மைகளை தருகிறது. ஆனால் தேன் சாப்பிடுவதற்க்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பின் எடுத்துகொள்ளுங்கள்.