scorecardresearch

வெயில் காலத்தில் அடிக்கடி ஏற்படும் நீர் கடுப்பு: இந்த ஜூஸ் உதவலாம்

இந்த க்ரான் பெரியிலிருந்து ப்ரோயந்தோசயனிடின்ஸ் ( proanthocyanidins) எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வேதிப்பொருள், ஈ.கோலி (E. coli) பேக்டீரியாவை வளரவிடாது.

UTI

வெயில் காலம் என்றாலே சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அரிப்பு ஏற்படும். இந்நிலையில் இதை யு.டி.ஐ ( Urinary Tract Infections) அதாவது சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் சிக்கல் வெயில் காலத்தில் அதிகம் ஏற்படுகிறது. மேலும் இதனால் முதுகின் பிற்பகுதி, இடுப்பு மற்றும் வயிற்று வலி கூட ஏற்படும். இந்நிலையில் இதுபோன்று தொடர்ந்து ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.

ஆனால் வெயில் காலத்தில் ஏற்பட்டால், வீட்டில் சில விஷயங்களை செய்து இந்த நீர் கடுப்பு அல்லது சிறுநீர் கழிப்பதில் எரிச்சலை ஏற்படாமல் தடுக்க முடியும்.

இந்நிலையில் க்ரான் பெரி ஜூஸ் குடிப்பதால், இந்த சிக்கல் நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிராகவும் கருத்து நிலவுகிறது. ஒருமுறை உங்களுக்கு தீவிரமாக யு.டி.ஐ தொற்று ஏற்பட்டால், அதற்கு மருத்துவரிடம் செல்வதுதான் சரியாக இருக்கும்.

இந்த க்ரான் பெரியிலிருந்து ப்ரோயந்தோசயனிடின்ஸ் ( proanthocyanidins) எடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வேதிப்பொருள், ஈ.கோலி (E. coli) பேக்டீரியாவை வளரவிடாது. இந்நிலையில் இந்த பேக்டீரியா தான் யு.டி.ஐ தொற்று ஏற்படுவதற்கு காரணம். இந்நிலையில் இந்த க்ரான் பெரியிலிருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள், யு.டி.ஐ தொற்று வராமல் தடுக்கும். ஆனால் தொற்று ஏற்பட்ட பிறகு நாம் ஆண்டி பயாட்டிக் மருந்துகளைதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் நாம் அதிக சர்க்கரை சேர்க்காமல் இந்த ஜூஸை குடித்தால் உடலுக்கு நல்லது. இந்நிலையில் ப்ளூ பெரி தாவரக் குடும்பத்திலிருந்து வந்ததுதான் கிரான் பெரி. இந்நிலையில் சர்க்கரை சேர்க்காமல், உள்ள 10 எம். எல் கிரான் பெரி சாறில்,  46 கலோரிகள் உள்ளது. 9.8 மில்லி கிராம்  வைட்டமின் சி, 12.1  கிராம் சர்க்கரை இதில் உள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Can cranberry juice cure my uti