scorecardresearch

100 கிராம் சீதாப் பழம்… மாரடைப்பு அபாயம் தடுக்கும்; சுகர் இருந்தா இப்படி சாப்பிடுங்க!

பழங்களில் சிறப்பம்சம் கொண்ட பழமாக இருப்பது, சீதாப் பழம்தான். பழம் காலத்தில் சீதாப் பழத்துடன் ஆயுர்வேத நன்மைகளைப் பற்றி பல தரவுகள் உள்ளது. இதன் இலைகள், வேர், மரத்தின் பட்டை ஆகியவற்றுக்கு பல மருத்துவ பயன்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

100 கிராம் சீதாப் பழம்… மாரடைப்பு அபாயம் தடுக்கும்; சுகர் இருந்தா இப்படி சாப்பிடுங்க!

பழங்களில் சிறப்பம்சம் கொண்ட பழமாக இருப்பது, சீதாப் பழம்தான். பழம் காலத்தில் சீதாப் பழத்துடன் ஆயுர்வேத நன்மைகளைப் பற்றி பல தரவுகள் உள்ளது. இதன் இலைகள், வேர், மரத்தின் பட்டை ஆகியவற்றுக்கு பல மருத்துவ பயன்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிளைவிட இதில் இரண்டு மடங்கு கலொரிகள் இருப்பதால், சாப்பிடபின் உடலுக்கு உடனடியாக சக்தியை அளிக்கிறது.  இதில் அதிகளவில் பொட்டாஷியம் இருப்பதால், தசைகளுக்கு தளர்வு ஏற்படாமல் பாதுகாக்கிறது.  ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நமக்கு பரிந்துரக்கப்பட்ட மெக்னிஷியம் சத்தின் 10 % சீதாப் பழம் அளிக்கிறது. இதனால்  இதய தசைகள் ஓய்வெடுக்க உதவுகிறது. மேலும் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சீதாப் பழம் சாப்பிடுவது, அவ்வளவு நல்லதல்ல. அது மிகவும் இனிப்பான பழம். இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 54 ஆக இருந்தாலும், சக்கரையின் தாக்கம் 10.2 புள்ளிகள் என்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள கூடாது. சிறிய துண்டுகளாக எடுத்துகொள்ளலாம். அதுவும் உணவுடன், சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். தயிர், ஸ்மூத்தி, ஓட்ஸ்-யுடன் இதை நாம் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. 100 கிராம் சீதாப்பழத்தில்  20 எம்ஜி வைட்டமின் சி இருக்கிறது. இது இன்சுலின் சுரப்பதற்கு உதவுகிறது. இதில் இருக்கும் மெக்னிஷியம், கால்சியம் , இரும்பு சத்து மறைமுகமாக இன்சுலின் சுரப்பதற்கு உதவுகிறது.  மேலும் இதில் இருக்கும் நார்சத்து, நாம் அதிகம் சாப்பிட்டதுபோல் உணர்வை தந்து, ஸ்நாக்ஸ் சாப்பிடத் தூண்டுவதில்லை.

வயிற்றில் இருக்கும் அல்சரை குணமாக்க உதவுகிறது. வயிற்றின் செயல்பாடுகளை சீராக்க உதவுகிறது.

இது புற்றுநோய், இதய நோய் உண்டாகாமல் தடுக்கிறது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில், இதன் இலைகள் வீக்கத்திற்கு எதிராகவும், புற்று நோய்க்கு எதிராகவும், உடல் பருமனுக்கு எதிராகவும், வைரஸ்- பேக்டீரியா போன்றவைகளுக்கு எதிராக இருக்கிறது. இதில் வைட்டமின் பி-காம்பிளக்ஸ், தைமைன், ரிபோபிலாவின், நைசின், வைட்டமின் பி6 ஆகியவை உள்ளது.  இதில் இருக்கும் பி-காம்பிளக்ஸ் சத்து மூளையில் ஏற்படும் அழுத்தங்களை கட்டுபடுத்த உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Can diabetics have custard apple