செயற்கையான இனிப்பூட்டிகளை உடல் எடை குறைக்க சாப்பிட வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக நாட்கள் சாப்பிட்டல் சர்க்கரை நோய், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் மற்றும் மரணம் வரை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உடல் எடை குறைப்பதுதான் முக்கியம் என்று நினைப்பவர்கள் இனிப்புக்கு பதில் இந்த செயற்கையான இனிப்பூட்டிகளை சாப்பிடும்போது இனிப்பு எடுத்துக்கொள்ளும் அளவுதான் குறைகிறது. இதனால் கூடுதலாக வேறு அதிக கலோரிகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் உடல் எடை குறையாது.
இந்நிலையில் உடல் எடை குறைப்பது முக்கிய லட்சியம் இல்லை. ஆனால் சர்க்கரை எடுத்துகொள்வதை கட்டுபடுத்த வேண்டும் என்றால் செயற்கையான இனிப்பூட்டிகளை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் ஐரோப்பாவின் உணவுப் பாதுகாப்புத்துறை, நாம் செயற்கையான இனிப்பூட்டையை சாப்பிடலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றனர். இதுபோன்ற செயற்கையான இனிப்பூட்டிகள், சாப்பிடும்போது, ஜிரணமாவதில் சிக்கல் உள்ளிட்ட சிறிய சிக்கல் ஏற்படலாம் ஆனால் இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது.
இந்நிலையில் செயற்கையான இனிப்பூட்டிகளை நாம் எந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் செயற்கையான இனிப்பூட்டியான, அஸ்பர்ட்டமே, சுக்கர்லோஸ், சக்ஹரின் உள்ளிட்டவையை ஒரு கிலோவிற்கு 9 முதல் 23 மில்லிகிராம் வரை நமது உடல் எடைக்கு தகுந்தாற்போல் எடுத்துக்கொள்ளலாம்.
இயற்கையான இனிப்பூட்டியான, சட்டைவா- வை ஒரு கிலோவிற்கு 4 முதல் 12 மில்லிகிராம் என ஒட்டுமொத்த உடல் எடைக்கு தகுந்தவாறு எடுத்துகொள்ளலாம்.
இந்நிலையில் சர்க்கரைக்கு மாற்றாக தேனை நாம் எடுத்துகொள்ளலாம். ஆனால் அதனால் ரத்த குளுக்கோஸ் அதிகரிக்காமல் இருக்காது. தேனில் சத்துக்கள் இருந்தாலும், இது உடல் எடை குறையவோ அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மாற்றாக இருக்காது.
இதுபோல பேரிச்சம்பழத்திலும், இரும்பு சத்து, வைட்டமின்ஸ் இருந்தாலும் உடல் எடை குறைக்கவோ அல்லது சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவோ இது உதவாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“